ADDED : ஏப் 23, 2026 12:23 PM

அ நிறம் | அளவு
உறவுக்காரரான அலெக்ஸ் வீட்டுக்கு வந்திருந்தார். அவருக்கு டீ கொடுத்தாள் அந்த வீட்டுப் பெண் டயானா. சோர்வாக இருந்த அவள், ''என் மனதில் நிம்மதி இல்லை. நீங்கள் தான் வழிகாட்ட வேண்டும்'' என்றாள் பணிவுடன்.
காலையில் எழுந்ததும் என்ன சாப்பிட்டாய் எனக் கேட்டார் அலெக்ஸ். 'டீ' என்றாள்.
டீயைத் தயார் செய்ய என்ன வேண்டும் எனக் கேட்டார்.
''பால், சர்க்கரை, டீ துாள், இஞ்சி, ஏலக்காய்'' என்றாள் அவள்.
''ஒரு டீ தயாரிக்கவே இத்தனை பொருள் தேவைப்படுகிறது. அதுபோலத் தான் வாழ்க்கையும். அதில் இன்பம், துன்பம், லாபம், நஷ்டம், ஏற்றம், இறக்கம் எல்லாம் இருக்கத் தானே செய்யும்'' என்றார் அலெக்ஸ்.
