தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/கிறிஸ்துவம்/கதைகள்/சமுதாயத்திற்கே நன்மை

சமுதாயத்திற்கே நன்மை

சமுதாயத்திற்கே நன்மை


ADDED : ஜூன் 11, 2026 11:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 11, 2026 11:11 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஜெருசலேமை ஆண்ட சாலமன் ராஜாவின் அரண்மனைக்கு சீபா நாட்டு ராணி வந்தாள். ஏழு பெட்டிகளில் ரத்தினங்கள், தங்க நகைகள், விலை உயர்ந்த ஆடைகள், வாசனைத் திரவியங்களை பரிசாகக் கொண்டு வந்தாள். அத்தனையும் ராஜா முன் பரப்பி வைக்கப்பட்டன.

அங்கு வந்த வியாபாரி ஒருவர், “மகாராஜா! இந்தப் பொருட்களை என்ன செய்யப் போகிறீர்கள்?” எனக் கேட்டார். “நான் இவற்றை சுயநல எண்ணத்துடன் தொட மாட்டேன். ஆண்டவர் பணிக்காக செலவு செய்வேன்” என்றார். ராஜாவின் பரந்த எண்ணத்தைக் கண்ட ராணி மகிழ்ச்சி அடைந்தாள்.

சாலமனின் மதிநுட்பம் பற்றி கேள்விப்பட்ட அவள், அதை சோதனை செய்ய விரும்பினாள். இரண்டு பூங்கொத்துக்களை கொடுத்து, “இதில் எது இயற்கையானது; எது செயற்கையானது என்பதை கண்டுபிடியுங்கள்” என்றாள். சாலமன் பதில் சொல்லவில்லை. “ஏன் மவுனமாக இருக்கிறீர்கள்?” எனக் கேட்டாள்.

“மவுனத்திற்கு அதிக சக்தி உண்டு. அதனால் தான் அமைதியாக இருந்தேன். பகுத்தறியும் புத்தி மனிதனுக்கு இருந்தாலும் அதை சரியாக அவன் பயன்படுத்துவதில்லை. ஆனால் பூச்சிகள் சரியாக பதில் சொல்லி விடும்.

எந்தப் பூங்கொத்தின் இயற்கையான மணத்தை நுகர்வதற்கு வண்டு வருகிறதோ அது இயற்கையானது'' என்றார். அவரது பதிலைக் கேட்டு ராணி வியந்தாள். பகுத்தறிவை சரியாகப் பயன்படுத்தினால் சமுதாயத்திற்கே நன்மை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us