ADDED : ஜூன் 03, 2026 11:59 AM
அ நிறம் | அளவு
தன் தந்தை, நாடு கடத்தப்பட்டது அந்த சிறுவன் இளைஞனாக வளர்ந்த பிறகே தெரியும். அவர் குற்றம் செய்திருக்க மாட்டார் என நம்பினான். அம்மாவிடம் கேட்டதற்கு அவரைப் பற்றி குறை சொல்லவில்லை.
தந்தையின் முகவரியை தாயின் மூலம் அறிந்து கொண்டான். விளையாட்டு வீரனாகி வெளிநாட்டுக்குச் சென்று அவரை சந்திக்கலாம் என முடிவு செய்தான். அதன்படி விளையாட்டில் தீவிரமாக ஈடுபட்டான். தந்தை வசிக்கும் நாட்டிற்கு விளையாடச் சென்றான். அவரை சந்தித்த போது, அவர் திருமணம் முடித்து ஐந்து குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தார். இருப்பினும் தந்தை மீதுள்ள பாசம் அவனுக்கு குறையவில்லை. அவரைப் பற்றி ஒரு தவறு கூட சொல்லாமல் வளர்த்த தாயை எண்ணி பெருமை கொண்டான். 'அம்மாவே தெய்வம்' என்பது காதில் ஒலித்தது. அவர் சீனாவைச் சேர்ந்த கைப்பந்து வீரர் 'வாங் காங் கெங்'.
