ADDED : மே 28, 2026 11:09 AM

அ நிறம் | அளவு
ஸ்பெயின் நாட்டு வீரர் இவான் பெர்னாண்டஸ் அனயா. கென்யா நாட்டு வீரர் ஏபெல் முடாய். இருவரும் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்ற போது வெற்றிக்கான எல்லைக்கோட்டின் அருகே சென்று அதைத் தொடாமல் நின்று விட்டார் முடாய்.
அவருக்கு பின்னால் வந்த அனயா முதல் நபராக ஓடி வந்து வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால் என்ன செய்தார் தெரியுமா... முடாயை தள்ளி விட அவர் வெற்றிக் கோட்டை மிதித்தார். 'ஏன் இப்படி செய்தீர்கள்' என அனயாவிடம் நிருபர்கள் கேட்ட போது, 'முதல் பரிசை தட்டிச் செல்வது பெருமை தான். அதை விட அதை வாங்குவதற்கு உதவி செய்வது இன்னும் பெருமையான விஷயம் தான். என் செயலை பார்த்தால் என் தாயார் மிகவும் மகிழ்ச்சி அடைவார்' என்றார்.
