ADDED : மே 20, 2026 10:55 AM

அ நிறம் | அளவு
முள் வேலி சுற்றிய நிலத்தில் இரண்டு கழுதைகள் மேய்ந்தன. அங்கு தேவைக்கும் அதிகமான புல் கிடைத்தாலும், வேலிக்குள் கழுத்தை நீட்டி அடுத்த நிலத்தில் புல்லை மேய்ந்தன.
சிரமமாக இருந்தாலும் இப்படி தின்பதில் தான் அவற்றுக்கு விருப்பம். புல்லைக் கடித்து இழுக்கும் போது அவற்றின் தலை முள் வேலியில் உரசவே வலியால் கத்தின. ஆனால் தலையை விடுவிக்க முடியாமல் திணறின. இதைப் போல தற்காலத்தில் மனிதர்கள் வேண்டாத விஷயத்தில் தேவை இல்லாமல் சிக்கி அவதிப்படுகின்றனர்.
நல்ல எண்ணம், விசுவாசம், ஒழுக்கம் உள்ளவர்கள் வேலியை தாண்ட விரும்பாமல் நிம்மதியாக வாழ்வார்கள்.
