ADDED : செப் 03, 2026 11:19 AM
அ நிறம் | அளவு
குறும்புத்தனம் கொண்ட சிறுவர்கள் சிலர் வண்டு ஒன்றைப் பிடித்தனர். அதன் சிறகைப் பிடுங்கி விட்டு வண்ணத்துப் பூச்சியின் சிறகுகள், வெட்டுக்கிளி உறுப்புகளை ஒட்டினர்.
விஞ்ஞானி டார்வினிடம் அதைக் காட்டி, ''புதுவகையான பூச்சியைப் பார்த்தீர்களா... இதற்கு நீங்களே பெயர் சூட்டுங்கள்' என்றனர்.
'பாவம்... இதை கொன்று விட்டீர்களே... நீங்கள் பிடித்த போது இந்த பூச்சி ரீங்காரமிட்டதா...'' எனக் கேட்டார்.
'ஆமாம்' என்றனர் சிறுவர்கள்.
'பலே பலே... இது தான் ஹம்பக்' என்றார் டார்வின்.
'ஹம்' என்றால் ரீங்காரம், 'பக்' என்றால் பூச்சி என பொருள். அதாவது ரீங்காரமிடும் பூச்சி.
இந்த சொல்லே 'முழுப்பொய்' என்னும் பொருளில் ஆங்கிலத்தில் பயன்படுகிறது.
விஞ்ஞானியை ஏமாற்ற நினைத்த சிறுவர்களே முடிவில் ஏமாந்தனர்.
