ADDED : செப் 03, 2026 11:13 AM

அ நிறம் | அளவு
எழுத்தாளர் அலெக்சாண்டர் டூமாசை மட்டம் தட்ட வேண்டும் என நினைத்தார் தலைக்கனம் பிடித்த ஒரு நபர். அவரை சந்திக்க வாய்ப்பு கிடைத்த போது 'உங்கள் முன்னோர் எல்லாம் மலையில் பிறந்தவர்களாமே' என்றார்.
'ஆமாம்' என்றார் டூமாஸ்.
'உங்களின் பெற்றோர் யார்' என அவர் கேட்க, 'படிக்காத மலைவாழ் மக்கள்' என்றார் டூமாஸ். அதன் பின் உன் தாத்தா, பாட்டி யார் எனக் கேட்டார். பொறுமையை இழந்த டூமாஸ், 'அவர்கள் வால் இல்லாத குரங்குகள்' என்றார்.
அதைக் கேட்டு சிரித்த அவர் 'தங்களின் பரம்பரை அங்கிருந்து தான் வந்ததோ' எனக் கேட்டார். அதற்கு டூமாஸ், 'என் பரம்பரை மட்டுமல்ல... உம்முடைய பரம்பரையும் அங்கிருந்து தான் வந்தது' என்றார்.
அதை கேட்டதும் தலைக்கனம் பிடித்தவர் வாய் திறக்கவில்லை.
யாரையும் ஏளனமாக நினைக்காதீர்கள்.
