ADDED : செப் 10, 2026 07:45 AM
கல்லுாரி கலையரங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் நிர்மலிடம், 'சார்! காலையில என் பர்ஸ் இங்க தொலைஞ்சு போச்சு. அதில ஐ.டி.,கார்டு, பணம், ஏ.டி.எம்., கார்டு எல்லாம் இருந்துச்சு” என்றாள் பேராசிரியை ஜெனிபர்.
“கவலைப்படாதீங்க மேடம்! அரங்கத்தை சுத்தம் செய்ய ஆயா இப்போ வந்துடுவாங்க'' என்றான் நிர்மல்.
“இல்லை... அவசரமா வெளியில் போகணும். நாளைக்கு வந்து வாங்கிக்கிறேன்”என்றாள் ஜெனிபர்.
“அப்படி செய்ய முடியாது. காத்திருங்க” என்றான் நிர்மல். வேறு வழியின்றி நின்றாள்.
சிறிது நேரத்தில் ஆயா வந்ததும், மூவரும் சேர்ந்து தேடினர். ஒரு மூலையில் கிடந்த பர்சை ஆயா எடுத்து வந்தாள். மகிழ்ச்சியுடன் வாங்கிய ஜெனிபர் அன்பளிப்பாக இருநுாறு ரூபாயைக் கொடுத்தாள்.
'' உங்களை ஏன் காத்திருக்க சொன்னேன் தெரியுமா..? பர்சில பணம் காணாமப் போனா வீண் சந்தேகம் வரும். நீங்களே நேரில் இருந்தால் மனசு நிம்மதியா இருக்கும்” என்றார் நிர்மல்.
சைக்காலஜி துறையைச் சேர்ந்த ஜெனிபர் அதைக் கேட்டு ஆச்சரியப்பட்டாள். நன்றி சொல்லி புறப்பட்டாள்.
