ADDED : செப் 10, 2026 07:46 AM
அ நிறம் | அளவு
அமெரிக்காவைச் சேர்ந்தவர் நடிகை ஜெனிடீர்னி. ஒருநாள் அவரது தோழி, 'உனக்கு பத்தாயிரம் டாலர் பணம் அல்லது பத்துக் குழந்தைகள் பெற்றுக் கொள்ள ஆண்டவர் வாய்ப்பு தருவதாக வைத்துக் கொள். எதை அவரிடம் கேட்பாய்' எனக் கேட்டாள்.
'பத்து குழந்தைகள் தான் எனக்கு வேண்டும்' என்றார் நடிகை. அதற்கான காரணத்தைக் கேட்ட போது, 'பணத்தின் மீதுள்ள ஆசை எப்போதும் தீராது. அது வளர்ந்து கொண்டே போகும். ஆனால் குழந்தை வளர்ப்பு என்பது தெய்வீகமானது. பத்துக் குழந்தைகள் நான் பெற்றால் தாய்ப்பாசத்தால் என் மனம் கனிந்து விடும்' என்றார் ஜெனி.
