ADDED : செப் 10, 2026 07:47 AM

இளைஞர் ஒருவர், இயேசுவை போல தண்ணீரை திராட்சை ரசமாக என்னால் மாற்ற முடியும் என அறிவிப்பு செய்தார். அதை காண மக்கள் கூடினர். அப்போது கண்ணாடி ஜாடியில் அவர் தண்ணீர் ஊற்றினார். அதில் ஒரு கரைசலை ஊற்ற அது திராட்சை ரசமாக மாறியது.
அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர், ''தண்ணீரில் ஏதோ கரைசலை ஊற்றினீர்கள். அது திராட்சை ரசம் போல் நிறம் மாறி விட்டது. இதை நாங்கள் குடிக்கலாமா'' என கேட்டார். குடிக்க கூடாது என்றார் இளைஞர். இதில் ஊற்றிய கரைசல் தண்ணீரை திராட்சை ரசம் போல மாற்றும்.
இது நீங்கள் பார்க்க மட்டுமே. ருசிக்க அல்ல'' என்றான் இளைஞன்.
அந்த நபர் சிரித்தபடி, ''கானாவூர் திருமண வீட்டில் இயேசு செய்தது அற்புதம். எந்த கரைசலையும் அவர் தண்ணீரில் ஊற்றவில்லை. அது தானாகவே நிஜமான திராட்சை ரசமாக மாறியது. விருந்தினர் அனைவரும் குடித்து மகிழ்ந்தனர். சாதாரண மனிதர்களால் ஆண்டவரை போல அற்புதம் நிகழ்த்த முடியாது' என்றார்.
