ADDED : செப் 10, 2026 07:53 AM
பள்ளி ஆசிரியர் ஒருவர் ஆப்பிரிக்கப் பழங்குடி இனச் சிறுவர்களுக்கு போட்டி ஒன்றை நடத்தினார். கூடை நிறைய பழங்களை நிரப்பி ஓரிடத்தில் வைத்தார். சிறுவர்களை சிறிது துாரத்தில் வரிசையாக நிறுத்தினார்.
ஓடி வந்து யார் முதலில் கூடையைத் தொடுகிறாரோ அவர்களுக்கு பழம் பரிசாகத் தரப்படும் என்றார். விசில் ஊதப்பட்டது. சிறுவர்கள் என்ன செய்தனர் தெரியுமா? ஒருவர் கையை ஒருவர் பிடித்தபடி ஓடி வந்து ஒரே நேரத்தில் கூடையைத் தொட்டனர்.
பழங்களை ஆளுக்கு ஒன்றாக எடுத்துக் கொண்டனர். ஏன் இப்படி செய்தீர்கள் எனக் கேட்டார் ஆசிரியர். சிறுவர்கள் ஒரே குரலில் 'உபுண்டு' எனக் குரல் எழுப்பினர். 'உபுண்டு' என்பதற்கு 'மற்றவர் மீது இரக்கமுடன் இருங்கள்' எனப் பொருள்.
மற்றவர் அனைவரும் பசியுடன் இருக்க, ஒருவர் மட்டும் பழங்களை சாப்பிடுவது உண்மையான வெற்றி ஆகாது என விளக்கம் அளித்தனர். படிக்காத பழங்குடி இனச் சிறுவர்கள் சொன்ன செய்தி ஆசிரியரை வியப்பில் ஆழ்த்தியது.
