ADDED : செப் 10, 2026 07:54 AM
தன்னம்பிக்கை பேச்சாளரான ஜாக் கேன்பீல்டு 'எண்ணங்களுக்கு அதிக வலிமை உண்டு. ஆழ்மனதில் நாம் நினைப்பது நிச்சயம் நடக்கும்' என்கிறார். இவர் எழுதிய 'தி சக்சஸ் பிரின்சிபிள்ஸ்' (வெற்றி கொள்கை) புத்தகத்தை 'தி டுவைலைட் ேஸான்' (அந்தி நேரம்) பத்திரிகையில் அறிமுகம் செய்தால் நன்றாக இருக்கும் என அடிக்கடி நினைத்து வந்தார்.
அந்த சமயத்தில் நியூயார்கில் உள்ள கல்லுாரி ஒன்றில் தன்னம்பிக்கை பற்றி பேச சென்றிருந்தார். அங்கு வந்த பெண் ஒருவர், 'தி டுவைலைட் ேஸான் பத்திரிகையில் நிருபராக இருக்கிறேன். இன்று உங்களின் பேச்சை ரசித்துக் கேட்டேன். பத்திரிகை பேட்டிக்காக தங்களை எப்போது அணுகலாம் எனக் கேட்டாள். தன் விருப்பத்தை தேடி வந்து நிறைவேற்றிய ஆண்டவருக்கு நன்றி எனச் சொல்லி மகிழ்ந்தார் ஜாக் கேன்பீல்டு. நீங்கள் எதை ஆழ்ந்து சிந்தித்தாலும் அது உங்களைத் தேடி வரும்.
