தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/கிறிஸ்துவம்/கதைகள்/மனசை கட்டுப்படுத்து

மனசை கட்டுப்படுத்து

மனசை கட்டுப்படுத்து


ADDED : செப் 18, 2026 08:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 18, 2026 08:07 AM


Follow on Google
அ நிறம் | அளவு

 பள்ளியில் இருந்து வீட்டுக்கு வந்த அமல்ராஜ் பாட்டியிடம் கதை சொல்லும்படி வேண்டினான். அவளும் குரங்கு கதை ஒன்றைச் சொன்னாள்.

வித்தை காட்டி பிழைக்கும் ஒருவன் இருந்தான். அவனது வீட்டில் குரங்கு தான் உணவு பரிமாறும்.

அது பரிமாறும் போது ஒவ்வொரு தடவையும் குரங்கை குச்சியால் அவன் அடிப்பான். இலை போட்டதும் ஒரு அடி. சோறு வைத்ததும் ஒரு அடி. குழம்பு ஊற்றியதும் ஒரு அடி. இப்படியாக... அடி வாங்கிக் கொண்டே குரங்கு வேலைகளை செய்யும்.

அப்போது வீட்டில் இருந்த விருந்தாளி ஒருவர்,

‘தப்பு செய்யாத குரங்கை அடிக்காதீங்க’ என வேண்டினார். ‘சரி இனி அடிக்க மாட்டேன்’ என்றான். விருந்தாளிக்கும் இலை போட்டது குரங்கு. அதை அவன் அடிக்கவில்லை. இலையில் தண்ணீரும், சோறும் வைத்தது. அப்போதும் அடி விழாததால் குரங்கிற்கு துணிச்சல் வந்தது. குழம்பு எடுத்து வரும் போதே கையால் அதை கலக்கியது. விருந்தாளி முகம் சுளித்தபடி ‘ச்சீ ச்சீ’ எனக் கத்தினார். நகத்தால் அவரை பிறாண்டியது. காப்பாற்றும்படி கதறினார்.

உடனே குச்சியை கையில் எடுத்தான் வித்தைக்காரன். குரங்கு அமைதியானது.மனம் இந்த குரங்கு போலத்தான். புத்தி என்ற குச்சியால் அதை கட்டுப்படுத்தாவிட்டால் நம் கதி அதோகதியாகி விடும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us