தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/கிறிஸ்துவம்/கதைகள்/மதயானைக் கூட்டம்

மதயானைக் கூட்டம்

மதயானைக் கூட்டம்


ADDED : செப் 18, 2026 08:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 18, 2026 08:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

2012ல் தென் ஆப்பிரிக்காவில் நடந்த உண்மைச் சம்பவம் இது.

இங்குள்ள 'துலா துலா' சரணாலயத்தின் பெயரைக் கேட்டதும், நம் நினைவுக்கு வருவது இங்குள்ள காடும், அங்கு வாழும் யானைக் கூட்டமும் தான்.

இப்பகுதியில் வசிக்கும் மனிதர்களை தாக்குவது, வீடுகளை சூறையாடுவது என முரட்டுத்தனமான மதயானைகள் கூட்டமாக இங்கிருந்தன. வனத்துறை அதிகாரிகளால் அவற்றை கட்டுப்படுத்த முடியாததால் கொல்ல முடிவு செய்தனர். இதையறிந்த விலங்குநல ஆர்வலரான லாரன்ஸ் யானைகளின் மீது இரக்கப்பட்டார்.

காட்டு யானைகளை நோக்கி தைரியமாகச் சென்று 'என்னால் எந்த ஆபத்தும் ஏற்படாது. உங்களை நான் ஆதரிக்கிறேன்' என மனம் திறந்து அன்பு மொழியில் உணர்த்தினார். அதை ஏற்று யானைகளும் தும்பிக்கையை துாக்கி அன்பை உணர்த்தின. அட்டூழியம் செய்வதை விட்டதால் மக்கள் நிம்மதி அடைந்தனர்.

இந்த சம்பவத்திற்கு பிறகு திடீரென ஒருநாள் லாரன்ஸ் இறந்தார். அவருடைய இறுதிச்சடங்கில் பங்கேற்க யானைகள் கூட்டமாக (31 யானைகள்) வந்தன. இதற்கு முன்பு லாரன்ஸ் வீட்டிற்கு அந்த யானைகள் வந்ததில்லை. லாரன்ஸ் இறந்தது யானைகளுக்கு எப்படி தெரிந்தது என்பது இது வரை மர்மமாகவே உள்ளது. சோகத்துடன் நின்ற யானைகள் கண்ணீர் சிந்தின.

அவருக்கு அஞ்சலி செலுத்தி விட்டு காட்டிற்குள் சென்றன.

'யானைகளின் மனதைப் புரிந்து கொண்ட மாமனிதர்' எனப் போற்றப்படுகிறார் லாரன்ஸ்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us