ADDED : செப் 18, 2026 08:12 AM
அ நிறம் | அளவு
சோம்பல் குணம் கொண்ட கிராமத்துச் சிறுவர்கள் இருவர் இருந்தனர்.
நண்பர்களான அவர்களுக்கு நகரத்தில் நடக்கும் விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றால் பரிசு கிடைக்குமே என ஆசை வந்தது. கிராமத்தின் தலைவரிடம் போய், தங்களின் விருப்பத்தைக் கூறினர். அவர் வீட்டில் இருந்து கருப்பு மை டப்பா ஒன்றை கொடுத்து 'உங்களுக்கே வெற்றி' என வாழ்த்தி அனுப்பினார். அவர்களும் போட்டியில் பங்கேற்று பரிசு பெற்றனர்.
தலைவரிடம் நன்றி சொல்ல வந்த போது, ''நீங்கள் கொடுத்த மையால் தான் நாங்கள் வெற்றி பெற்றோம்'' என்றனர். அதற்கு அவர், ''நீங்கள் சொல்வது நிஜமல்ல. அது என் மனைவியின் கண் மை டப்பா தான். மனதில் நம்பிக்கை இருந்தால் வெற்றி தானாக வரும்'' என்றார் தலைவர்.
