ADDED : செப் 24, 2026 12:12 PM
அ நிறம் | அளவு
சிறுமி எஸ்தர் தன் அம்மாவிடம், ''அம்மா... ஆண்டவரை பிரார்த்திக்கிறோம். ஆனால் அவரை நான் பார்த்ததே இல்லையே...'' எனக் கேட்டாள்.
அவளுக்கு எப்படி புரிய வைப்பது' என யோசித்தாள் அம்மா.
''நீ எப்போதும் அவரை பார்த்துட்டே தான் இருக்கே'' என்றாள்.
''நீ சொல்றது புரியலையே'' என்றாள் எஸ்தர்.
''உன்னிடம் அன்பு காட்டுவோர் எல்லாம் ஆண்டவரே'' என்றாள்.
''அப்படின்னா... இப்போதும் ஆண்டவரிடம் தான் நான் பேசிக்கிட்டு இருக்கேன்'' எனச் சொல்லி சிரித்தாள் எஸ்தர்.
