தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/கிறிஸ்துவம்/கதைகள்/இதுவும் கடந்து போகும்

இதுவும் கடந்து போகும்

இதுவும் கடந்து போகும்


ADDED : செப் 24, 2026 12:11 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 24, 2026 12:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பள்ளிக்குச் சென்று வந்ததும் நண்பர்களுடன் விளையாடுவது அமல்தாசின் வழக்கம். ஆனால் அன்று மாலையில் விளையாடச் செல்லவில்லை. அவனுடைய பாட்டி,'என்னாச்சு... ஏன் சோகமாக இருக்க...அமல்' எனக் கேட்டாள். அவன் கண்களில் கண்ணீர் வழிந்தது.

தன்னுடன் படிக்கும் நண்பர்கள் அனைவரும் இரண்டு நாள் சுற்றுலா சென்றதையும், பணம் இல்லாததால் தான் மட்டும் வகுப்பில் தனியாக இருப்பதையும் சொல்லி அழுதான்.

''கவலைப்படாதே. கஷ்டத்தை நினைத்து வருந்தாதே. படிப்பில் கவனம் செலுத்து. இதுவும் கடந்து போகும். நிச்சயம் உன் எதிர்காலம் நன்றாக இருக்கும். ஆண்டவர் துணையிருப்பார்'' என ஆறுதலாக கூறினாள்.

அந்த சமயத்தில் அமல்தாசின் மாமா தின்பண்டத்துடன் வந்தார். அவனுக்கு அதைக் கொடுத்தாள் பாட்டி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us