ADDED : செப் 24, 2026 11:56 AM
அ நிறம் | அளவு
சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்தார் பாதிரியார் ஒருவர். அதில் அவர், 'தினமும் நீங்கள் உடல் துாய்மைக்காக குளிக்கிறீர்கள்.உடல்நலத்திற்காக சத்தான உணவுகளை சாப்பிடுகிறீர்கள். ஓய்வு எடுக்கிறீர்கள் ஏன் தெரியுமா'' எனக் கேட்டார். யாரும் பதில் சொல்லவில்லை.
இந்த உடம்புக்காக. இந்த உடம்பு தான் கழுதை போல நம் உயிரைச் சுமக்கிறது. அதை பாதுகாக்கவே குளிக்க வைக்கிறோம். உணவு அளிக்கிறோம். துாங்குகிறோம்'' என்றார்.
ஆனால் ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். போதை, மது, மாது போன்ற கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாகி விட்டால் உடலாகிய கழுதையை நாம் சுமக்கும் சூழல் உண்டாகும் என்பதை மறந்து விடாதீர்கள்'' என்றார்.
''சரி... இனி மேல் யாராவது கழுதை எனத் திட்டினால் நீங்கள் கோபப்பட மாட்டீர்களே'' எனச் சிரித்தார் பாதிரியார்.
