ADDED : அக் 01, 2026 10:18 AM

அதிகாலை நேரத்தில் ஒரு வீட்டின் முன்பு நாய்கள் கூட்டமாக நின்றன.
அதை பார்த்தவர்கள், 'இந்த வீட்டினர் நாய்க்கு பிஸ்கட், உணவு தருவார்கள் போலிருக்கு' என நினைத்தனர்.
ஆனால் அந்த வீட்டில் ஆள் நடமாட்டமே இல்லை. விலங்கு நலக் கட்டுப்பாட்டு அதிகாரி ஒருவர் நடைபயிற்சியின் போது அந்த நாய்களைக் கண்டார். அவை குரைக்கவோ, ஓடவோ இல்லை.
வீட்டில் வசிப்பவர் யார் என பார்க்க வந்தார் அதிகாரி. தனியாளாக முதியவர் ஒருவர் படுத்திருந்தார். அவரால் எழுந்திருக்க முடியவில்லை.
மெல்லிய குரலில், தினமும் நாய்களுக்கு உணவு கொடுப்பது என் வழக்கம். ஓரிரு நாளாக அவற்றுக்கு உணவு தர முடியவில்லை என வருந்தினார்.
தங்களின் நன்றியை வெளிப்படுத்த நாய்கள் கூடியிருப்பது பற்றி சொன்னார் அதிகாரி. 'பெற்ற பிள்ளை என்னை புறக்கணிக்கிறான். ஆனால் இந்த நாய்கள் என் அன்புக்காக ஏங்குகின்றன' என வருந்தினார் அந்த முதியவர்.
