ADDED : அக் 08, 2026 02:06 PM
அ நிறம் | அளவு
விஞ்ஞானி எடிசன் பள்ளியில் படித்த போது மருத்துவ பரிசோதனை நடந்தது. அங்கிருந்த மருத்துவர்கள், 'மூளையின் செயல்பாடு சரி இல்லாத இவன் எதிர்காலத்தில் பைத்தியம்ஆவான்' என்றனர்.
பள்ளி நிர்வாகம் எடிசனின் தாய் நான்சிக்கு தகவல் சொன்னது. அதைக் கேட்ட அவர், 'நானே ஆசிரியராக இருந்து என் மகனை ஆளாக்குவேன்' என சபதம் செய்து கற்றுத் தர ஆரம்பித்தார். தாயாரின் ஊக்கத்தால் நன்றாக படித்து விஞ்ஞானியானார் எடிசன்.
பிற்காலத்தில் அவர் தன்னுடைய ரசிகர்களிடம், 'மனிதன் கடன்பட்டிருப்பது மூளைக்கு அல்ல... முயற்சிக்கே! திறமையைக் கொண்டே மனிதன் அளக்கப்படுகிறான்.
இதை நினைவில் கொள்பவர் வெற்றியாளராக உருவாவர். இதுவே நான் கண்ட வாழ்க்கை ரகசியம்' என விழா ஒன்றில் கூறினார்.
