தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/கிறிஸ்துவம்/கதைகள்/நம்பிக்கை

நம்பிக்கை

நம்பிக்கை


ADDED : அக் 08, 2026 02:48 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 08, 2026 02:48 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அண்ணன் ஜோசப்புக்கும், தம்பி வில்சனுக்கும் ஒரே இடத்தில் தனித்தனி நிலங்கள் இருந்தன. அந்த ஆண்டு மழை பெய்யாததால் கிணற்றில் தண்ணீர் இல்லை. இருவருக்கும் அந்தக் கிணறு பொதுவானது.

'நான் என் கடமையைச் செய்வேன். அதற்கான பலனை ஆண்டவர் தருவார்' என நம்பிக்கையுடன் நிலத்தை உழுதான் வில்சன். கிணற்று நீரை பயன்படுத்தி பயிர்களை நட்டான்.

வானத்தை அண்ணாந்து பார்த்த ஜோசப், 'மழைக்கான அறிகுறியே இல்லை. வேலை செய்வது வீண் வேலை' என புலம்பினான். வேலையை விட்டு விட்டு வீணாக பொழுது போக்கினான். கையிலுள்ள பணத்தை எல்லாம் செலவழித்ததால் கடன் வாங்கினான்.

ஒரு மாதம் கழிந்தது. பருவ மழை தாமதமாக தொடங்கியது. பயிர் செய்ததால் தம்பியின் நிலத்தில் செழிப்பு ஏற்பட்டது. ஆனால் அண்ணனின் நிலம் மழை பெய்தும் தரிசாக கிடந்தது.நம்பிக்கை உள்ளவனின் கைகள் செல்வத்தை உண்டாக்கும் என்கிறது பைபிள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us