ADDED : அக் 08, 2026 02:49 PM
அ நிறம் | அளவு
சிலுவைப் போர் நடந்து கொண்டிருந்த நேரம் அது. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மன்னர் பிலிப் அகஸ்டின் படைவீரர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
கிரீடத்தைக் கழற்றி வைத்தபடி, ''வீரர்களே! இந்த கிரீடத்தைச் சூட்டிக் கொள்வதில் எனக்கு விருப்பமில்லை. போர்க்களத்தில் வெற்றிக்கு காரணமாக யார் இருக்கிறாரோ அவருக்கே இந்த கிரீடம். அவரே இந்த நாட்டின் மன்னர்'' என அறிவித்தார். உற்சாகமுடன் வீரர்கள் சண்டையிட்டனர்.
இறுதி நாள் போரில் மன்னர் பிலிப் அகஸ்டின் ஆவேசமாக சண்டையிட்டு வெற்றியை வசமாக்கினார். வீரர்கள் மன்னருக்கு கிரீடத்தை சூட்டி வெற்றியைக் கொண்டாடினர். தகுதி இருப்பவனை உலகமே கொண்டாடும்.
