ADDED : அக் 15, 2026 01:46 PM
அமெரிக்க எழுத்தாளர் மார்க் ட்வைன் நகைச்சுவையுடன் சமூக அவலங்களை நையாண்டி செய்பவர்; சம்பந்தபட்டவருக்கு புரியும் விதத்தில் காரசாரமாகவும் எழுதுவார். சிறுவருக்கான கட்டுரை, கதைகள் புனைவதில் கெட்டிக்காரர். இப்படி பன்முகத் தன்மை இருந்தாலும் அவ்வப்போது என்ன செய்கிறோம் என்பதை மறக்கவும் செய்வார்.
ஒருநாள் நண்பரை நலம் விசாரிக்க சென்றார். அந்த நேரத்தில் மழை பெய்யவே, நண்பரிடம் குடையை வாங்கிக் கொண்டு புறப்பட்டார். ஆனால் அதை கொடுக்க மறந்தார். ஒரு வாரத்திற்கு பிறகு சர்ச்சுக்குச் சென்றார். அங்கு அறிவிப்பு பலகையில், 'நேற்று சர்ச்சில் குடையை மறந்து விட்டு சென்ற நபர் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளவும்' என எழுதியிருந்தது.
அதை பார்த்த ட்வைனுக்கு மனதிற்குள், 'நண்பருக்கு தர வேண்டிய குடையை ஞாபகப்படுத்திய ஆண்டவருக்கு நன்றி' என பிரார்த்தனை செய்தார். நன்றி சொல்ல வாய்ப்பு கிடைத்தால் உடனே பயன்படுத்துங்கள்.
