ADDED : அக் 15, 2026 01:54 PM

லண்டனைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் ரூட்யார்ட் கிப்ளிங். இவரது வீட்டின் முன் இருந்த மரத்தில் பஸ் ஒன்று மோதியது.
பஸ் டிரைவரின் அலட்சிய புத்தியை கண்டித்து அவரது முதலாளிக்கு கடிதம் எழுதினார் கிப்ளிங். பதில் கிடைக்கவில்லை. தொடர்ந்து கடிதம் எழுதினார். அப்படியும் பலனில்லை.
கிப்ளிங்கின் கையெழுத்து அழகாக இருக்கும். அதைப் பார்த்த பஸ் முதலாளிக்கு ஒரு ஐடியா தோன்றியது. தான் நடத்தும் ஓட்டலில் வாடிக்கையாளர் பார்வையில் படும்படி அந்த கடிதத்தை வைத்தார். கடைக்கு வந்தவர்கள் பிரபல எழுத்தாளரின் கையெழுத்து என்பதால் விலைக்கு வாங்கவே வருமானம் கிடைத்தது.
திடீரென ஒருநாள் அந்த ஓட்டலுக்கு கோபத்துடன் வந்தார் கிப்ளிங். அவரைக் கண்டதும், ''சார் என்னை மன்னியுங்கள். நீங்கள் எழுதிய கடிதத்தை வாடிக்கையாளர்கள் விலைக்கு வாங்கினர். அதனால் வருமானம் கிடைத்தது. பதில் கடிதம் நான் எழுதி இருந்தால் உங்களை பார்க்கும் வாய்ப்பு கிடைத்திருக்காது' என்றார் பஸ் முதலாளி.
கோபம் தணிந்து சிரித்தபடி புறப்பட்டார் கிப்ளிங்.
