தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/கிறிஸ்துவம்/கதைகள்/துணிவே துணை

துணிவே துணை

துணிவே துணை


ADDED : அக் 22, 2026 12:29 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 22, 2026 12:29 PM


Follow on Google
அ நிறம் | அளவு

.அமெரிக்காவில் பிலிப்ஸ் என்ற சீர்திருத்தவாதி இருந்தார். அவர் நீக்ரோ மக்களின் விடுதலைக்காக பாடுபட்டார். அவரைக் கண்ட பாதிரியார்கள் சிலர் பொறாமையால் மட்டம் தட்டக் காத்திருந்தனர். ஒருமுறை பிரசாரம் செய்ய வந்த அவரிடம், 'நீக்ரோ மக்களை விடுதலை செய்ய வேண்டும் என்பது தானே உங்களின் குறிக்கோள்' எனக் கேட்டார் ஒரு பாதிரியார்.

'ஆமாம்' என்றார் பிலிப்ஸ்.

அப்படியானால், 'ஏன் நீக்ரோ மக்கள் அதிகம் இல்லாத இந்த ஒகியா மாவட்டத்தில் பிரசாரம் செய்கிறீர்கள். நீக்ரோக்கள் வாழும் பகுதிக்கு செல்ல வேண்டியது தானே' எனக் கேட்டு மடக்கியதாக கருதினார் ஒரு பாதிரியார்.

'மன்னியுங்கள். நீங்கள் பாதிரியார் தானே' எனக் கேட்டார் பிலிப்ஸ்.

'ஆமாம்' என்றார். உங்கள் வேலை என்ன என கேட்டதற்கு, 'பாவிகளை காப்பாற்றுவதே என் பணி' என்றார். அப்படியானால் 'பாவிகள் வசிக்கும் நரகத்திற்கு தானே நீங்கள் செல்ல வேண்டும். ஏன் இங்கு இருந்து காலத்தை வீணாக்குகிறீர்கள்' என துணிச்சலுடன் கேட்டார் பிலிப்ஸ்.

பதில் சொல்ல முடியாமல் உடனே இடத்தை காலி செய்தார் பாதிரியார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us