ADDED : அக் 22, 2026 12:31 PM

வாட்டர்லுா போரில் தோற்ற நெப்போலியன், தெற்கு அட்லாண்டிக் கடலில் உள்ள செயின்ட் ஹெலனா தீவில் சிறை வைக்கப்பட்டார். அவரை பார்க்க வந்த நண்பர் ஒருவர், செஸ் போர்டு ஒன்றை கொடுத்துச் சென்றார்.
அவரும் அதை வைத்து தனியாக விளையாடி பொழுது போக்கினார். நெப்போலியன் இறந்த பிறகு, அந்த போர்டு ஏலம் விடப்பட்டது. அது பலருடைய கைக்கு மாறி சிறுவன் ஒருவனுக்கு கிடைத்தது. தற்செயலாக அதில் இருந்த பட்டனை அவன் அழுத்திய போது, ஒரு வரைப்படம் வெளிப்பட்டது.
சிறையில் இருந்து தப்பிக்கும் வழி அதில் இருந்தது. ஆனால் அந்த உண்மை கடைசி வரை நெப்போலியனுக்கு தெரியவில்லை. பொழுதுபோக்குக்காக மட்டும் பயன்பட்ட செஸ் போர்டு, சிறையில் இருந்து தப்பிக்க உதவவில்லை.
இந்த வரைபடம் போலவே, உலகம் என்னும் சிறையில் இருந்து தப்பிக்க பைபிள் என்ற வரைபடத்தை ஆண்டவர் கொடுத்திருக்கிறார். இதை உணர்ந்தால் தீமைகளில் இருந்து தப்பிக்கலாம்.
