ADDED : அக் 22, 2026 12:37 PM
அ நிறம் | அளவு
வெள்ளத்தில் ஒரு பெண் தத்தளித்துக் கொண்டிருந்தாள். அதை பார்த்த துறவி ஒருவர், ஆற்றில் குதித்து அவளை காப்பாற்றினார். துறவிக்கு நன்றி சொல்லி விட்டு அந்த பெண் புறப்பட்டாள். சீடர்களுடன் துறவியும் பயணத்தை தொடர்ந்தார்.
சிறிது துாரம் நடந்ததும், 'என்ன தான் இருந்தாலும் துறவியான நீங்கள் ஒரு பெண்ணை தொட்டு துாக்கியிருக்க கூடாது' என்றான் சீடன். அதற்கு அவர், ' உயிருக்கும் போராடும் பெண்ணைக் காப்பாற்றுவது கடமை. உடம்பால் சுமந்த நான் அவளை அப்போதே மறந்து விட்டேன். இன்னும் நீ மனதில் சுமக்கிறாயே' எனக் கேட்டார் துறவி.
ஆசையை துறந்த துறவிக்கும் இரக்கம், கருணை அவசியம்.
