ADDED : அக் 29, 2026 01:25 PM
பணியாளர்கள் கூட்டத்தில் குறைகளை கேட்டறிந்தார் ஒரு நிறுவனத்தின் தலைவர். அவரிடம் பணியாளர் கழிப்பறைகள் சுத்தமாக இல்லை என புகார் செய்ததோடு, நிர்வாகத்தினர் பயன்படுத்தும் கழிப்பறை அசுத்தமாக இருக்குமா என்றும் கேள்வி கேட்டார்.
உடனே மேலாளர் ஜான்சனிடம், 'குறையைச் சரி செய்ய எத்தனை நாளாகும்' எனக் கேட்டார் தலைவர். இரண்டு நாளாகும் என்றார் அவரும் தயக்கத்துடன். அதற்கு தலைவர், 'இரண்டே நிமிடத்தில் சரி செய்கிறேன். உடனே ஆபிஸ் பாயைக் கூப்பிடுங்கள்' என்றார் கறாராக.
அவரும் வந்தார். அவரிடம் பணியாளர் கழிப்பறையில் உள்ள பலகையை நிர்வாகி அறைக்கும், நிர்வாகியின் கழிப்பறையில் உள்ள பலகையை பணியாளர்களின் அறைக்கும் இப்போதே மாற்றும்படி கூறினார். தன்னுடைய அக்கறையின்மையால் ஏற்பட்ட நிலையைக் கண்டு மேலாளர் ஜான்சன் வருந்தினார். பிரச்னைக்கு உடனடி தீர்வு காண்பது தான் சிறந்த நிர்வாகம்.
