தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/கிறிஸ்துவம்/கதைகள்/சேமிப்பு

சேமிப்பு

சேமிப்பு


ADDED : நவ 05, 2026 01:10 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 05, 2026 01:10 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மைக்கேலும் டேவிட்டும் சிறு வயதில் இருந்தே நண்பர்கள். இதில் மைக்கேல் செலவாளி. ஒருமுறை அவனது மனைவிக்கு உடல்நிலை சரியில்லாததால் பணம் தேவைப்பட்டது.

அந்த நேரத்தில் அவனை பார்க்க வந்தான் டேவிட், 'எப்படி இருக்க மைக்கேல்' எனக் கேட்டான்.

''என் மனைவிக்கு உடல்நிலை சரியில்லை. சிகிச்சைக்காக பணம் தேவைப்படுது. தர முடியுமா'' என்றான் மைக்கேல்.

“அரைமணி நேரத்தில் தருகிறேன்” எனச் சொல்லி புறப்பட்டான் டேவிட். அதன்படியே பணத்துடன் வந்தான். மைக்கேலுக்கோ எதுவும் புரியவில்லை. பணத்தை கொடுத்து விட்டு, “எப்போதும் உன்னை பற்றி மட்டுமே நீ சிந்தித்தாய். மற்றவர்களிடம் முகம் கொடுத்தும் பேசுவதில்லை. நான் சேமித்ததால் தான் உனக்கு உதவ முடிந்தது” என்றான் டேவிட். நண்பனை இறுக்கமாக கட்டிக் கொண்டான் மைக்கேல்.

'சரியான நேரத்தில் உதவுபவனே நண்பன்' என்கிறது பைபிள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us