ADDED : நவ 13, 2026 08:33 AM
அமெரிக்காவைச் சேர்ந்த ஹார்லண்ட் சாண்ட்ரஸ் மேற்படிப்புக்காக ஜெர்மனிக்குச் சென்றார். அங்கு நண்பர்களுடன் ஓட்டலுக்கு சென்றபோது அவரவருக்கு தேவையான உணவை ஆர்டர் செய்து சாப்பிட ஆரம்பித்தனர். முழுமையாக சாப்பிட முடியாததால் உணவை மிச்சம் வைத்தனர்.
அதைக் கண்ட மேனேஜர், 'உணவை வீணாக்கக் கூடாது. இனி இந்த தவறை செய்யாதீர்கள்' என எச்சரித்தார். துடுக்கான நண்பர் ஒருவர்,''பணம் கொடுத்து தானே வாங்கினோம். அதை என்ன செய்தால் என்ன'' எனக் கத்தினார்.
அதைக் கேட்ட மேனேஜர், ''உங்களுக்கு இந்த நாட்டின் சட்டம் தெரியாது. பணம் உங்களுடையதாக இருக்கலாம். ஆனால், நாட்டின் வளத்தில் இருந்து பெறும் பொருட்கள் அனைவருக்கும் பொதுவானது. அதை வீணாக்கினால் தண்டனை கிடைக்கும்'' என்றார். இதனை கேட்டு அனைவரும் மன்னிப்பு கோரினர். உணவை வீணாக்க மாட்டோம் என உறுதி அளித்தனர்.
