ADDED : நவ 13, 2026 08:42 AM

அ நிறம் | அளவு
வகுப்பில் முதல் மதிப்பெண் வாங்கிய லிபியா மற்ற மாணவர்களிடம் அலட்சியத்துடன் நடந்தாள். அதை பார்த்த ஆசிரியை மேரி அவளை கண்டிக்க நினைத்தார். அன்று வகுப்பில் மரங்களைப் பற்றி பாடம் நடத்திய போது, 'நம் பள்ளி வளாகத்தில் நீங்கள் சொல்ற எல்லா மரங்களும் இருக்கு மிஸ்' என்றாள் லிபியா.
மழை பெய்தால் மரத்திற்கு அருகில் காளான் முளைக்கும் தெரியுமா... எனக் கேட்டார் மேரி. தலையாட்டியபடி, 'ஆமா மிஸ். மரத்தடியில் முளைச்ச காளான், மறுநாளே கீழே விழுந்துடும்' என்றாள் லிபியா. 'அந்த காளான் போல இருக்கக் கூடாது. முதல் மதிப்பெண் வாங்கியதால் புத்திசாலி என நினைத்து மற்றவரை அலட்சியப்படுத்தாதே. காளான் மாதிரி காணாமல் போக நேரும்'' என்றார் மேரி.
