ஜோன் ஷெப்பர்ட் பேரோன் என்பவர் தன் மனைவிக்கு பரிசு தர விரும்பினார். பணம் எடுக்க சென்ற போது வங்கியின் பணி நேரம் முடிந்ததால் ஏமாற்றம் அடைந்தார். இந்நிலையில் மனைவியைப் பார்க்க அவர் விரும்பவில்லை.
சாக்லெட் வெண்டிங் இயந்திரம் இருக்குமிடம் சென்று தன்னிடம் இருந்து சில்லரை காசுகளை போட்டு சாக்லெட் வாங்கினார். பணம் இருந்தும் அவள் விரும்பிய பரிசை கொடுக்க முடியவில்லையே என்ற ஏக்கம் இருந்தது.
அப்போது அவர் கண் முன் பூட்டிய வங்கிக் கவுன்டரும், இயந்திரத்தில் காசு போட்டவுடன் கொட்டிய சாக்லெட்களும் மாறி மாறி வந்து போயின. எந்த நேரத்திலும் பணம் தரும் மெஷின் ஒன்று இருந்தால் எப்படி இருக்கும் என நினைத்தார் ஜோன். உடனே அதையும் செயல்படுத்திக்காட்டினார். தான் கண்டுபிடித்த ஏ.டி.எம்., இயந்திரத்தை லண்டனில் உள்ள பார்க்லேஸ் வங்கியில் வைத்தார்.
இதைப் பார்த்த பலர் 'என்னது பணம் தரும் மெஷினா' என ஆச்சர்யப்பட்டனர். ஜோனின் மனைவியால் ஏ.டி.எம்., அட்டைக்கான 6 இலக்க ரகசிய பின் நம்பரை ஞாபகம் வைத்துக் கொள்ள முடியவில்லை. மீண்டும் மனைவிக்காக செயலில் இறங்கினார் ஜோன். அதை 4 இலக்கமாக குறைத்தார்.
இதற்கெல்லாம் காரணம் ஜோனின் காதலே. நாம் செய்யும் செயலில் உண்மை இருக்குமானால் அது பல கோடி நபர்களுக்கு பயனளிக்கும்.