நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோம்பேறியான டேவிட் உழைக்காமல் ஊர் சுற்றினான். ஆனால் அவனுக்கு எளிய உயிர்கள் மீது இரக்கம் அதிகம். ஒருநாள் மாலையில் அவன் வீட்டு வாசலில் பறவை ஒன்று அமரவே அதற்கு உணவளித்தான். மறுநாள் காலையில் பார்த்தால், பறவை பருமனாக வளர்ந்திருந்தது. அதற்கு உணவளிப்பதற்காக அண்டை வீட்டாரிடம் தானியங்களை கடனாகப் பெற்றான். அதை உண்ட பின்னும் பசியடங்காமல் பறவை கத்தியது. என்ன செய்வது என வருந்தினான். பறவைக்கு உணவு தர வேண்டும் என்ற எண்ணத்தில் வீட்டின் அருகிலுள்ள மாவு மில்லிற்கு வேலைக்குச் சென்றான். ஓரிரு நாளில் பறவை இயல்பு நிலையை அடைந்தது. சிறிதளவு தானியமே போதுமானதாக இருந்தது. இப்படி ஒரிரு வாரம் கழிந்தது. உழைப்பின் அருமை அவனுக்கு புரிந்தது. பறவை வடிவில் வந்து மகனுக்கு பாடம் புகட்டிய தேவதைக்கு தேவலோகத்தில் இருந்த டேவிட்டின் தாய் கண்ணீர் மல்க நன்றி கூறினார்.