சிகாகோவைச் சேர்ந்த ஊழியக்காரரான மூடி என்பவர், கட்டட நிதி திரட்ட பல இடங்களுக்கு சென்றார். ஆனால் எதிர்பார்த்த தொகை கிடைக்கவில்லை. ஒருநாள் பிரிஸ்டல் நகருக்குச் சென்றார். அங்கு ஜார்ஜ் முல்லர் நடத்திய ஊழியத்தைக் கண்டு பிரமித்தார்.
அது பற்றி தன் தாயாருக்கு கடிதம் ஒன்றை எழுதினார் அதில்... ''ஜார்ஜ் முல்லர் என்பவர் ஆதரவற்றோர் விடுதி நடத்துகிறார். ஆயிரம் குழந்தைகள் அங்கு தங்கி படிக்கிறார்கள். அவர்களின் பாரமரிப்புக்காக யாரிடமும் நன்கொடை பெறவில்லை. தேவையான நேரத்தில் எப்படி பணம் வருகிறது என அவரிடம் கேட்டேன். 'ஆண்டவரின் பார்வை உங்கள் மீது விழச் செய்தால் போதும் தேவையான நிதி தேடி வரும்' என்றார். சரியான நேரத்தில் நல்லவர்களின் மூலம் பணம் முல்லரைத் தேடி வருவதைக் கண்டேன். ஆண்டவர் செய்யும் அற்புதம் தான் என்னே'' என எழுதினார். நாமும் நல்லவராக வாழ்ந்தால் நமக்கான கதவு திறக்கப்படும்.