ADDED : பிப் 19, 2024 01:40 PM
வாகனத்தை நிறுத்தி விட்டு டீ கடைக்குள் நுழைந்த டேவிட்டின் அலைபேசி ஒலித்தது. அதை எடுப்பதற்குள் கட் ஆனது. யாரென்று பார்த்தால் அவரது மைத்துனர். கோபத்துடன் வீட்டிற்கு வந்ததும் , ''மரியா... உன் தம்பி எந்த விஷயத்தையும் போன் செய்து சொல்ல மாட்டானா! மிஸ்டு கால் தான் தர்றான்'' எனக் கத்தினார். ''சரி... டென்ஷன் ஆகாதீங்க! வந்தா கேட்கிறேன்'' என்றாள்.
வீட்டிற்கு வந்த தம்பியிடம், ''என்னடா... எப்ப பார்த்தாலும் மிஸ்டு கால் தான் கொடுப்பியா'' எனக் கேட்டாள். ''அக்கா! புரியாம பேசாதே... அத்தான் டூவீலர்ல அலைகிறவர்.
விடாப்பிடியா ரிங் கொடுத்தா... ஏதோ அவசர விஷயம்னு நினைச்சு பதற்றமா எடுத்துப் பேசுவாரு இல்லையா''என விளக்கம் அளித்தான். அடுத்த அறையில் இருந்த டேவிட் இதைக் கேட்டு அமைதியாக இருந்தார்.
உறவுகளிடம் அன்பு காட்டுங்கள் என்கிறது பைபிள்.