
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்று பள்ளியின் கடைசி நாள் கடைசி வகுப்பு. ஆசிரியர் ஆபிரகாம் வகுப்பறைக்குள் நுழைந்தார்.
ஜாலியாகப் பேசும் அவர், நிச்சயம் நல்ல விஷயம் தருவார் என நம்பிக்கையுடன்
மாணவர்கள் காத்திருந்தனர். கரும்பலகையில் சிறிய கோடு ஒன்றும், பெரிய கோடு ஒன்றும் வரைந்தார்.
இதை மறக்காதீர்கள். வெற்றி உங்களுக்கே'' என்றார். அப்போது ஒரு மாணவன், 'புரியவில்லை' என்றான்.
''மூத்தவரையோ, வசதியானவரையோ கண்டால், இவரைப் போல வாழ நாம் உழைக்க வேண்டும். வயதில், வசதியில் குறைந்தவர்களைக் கண்டால் அவருக்கு உதவ வேண்டும் என நினையுங்கள். இதுவே இரு கோடுகளின் தத்துவம்'' என்றார்.
ஆபிரகாம் சொன்னது பசுமரத்தாணி போல அவர்களின் மனதில் பதிந்தது.