/
ஆன்மிகம்
/
கிறிஸ்துவம்
/
கதைகள்
/
நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்...
/
நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்...
ADDED : பிப் 23, 2024 11:26 AM
தள்ளுவண்டியில் காய்கறிகள் விற்று படிப்பு செலவையும், பெற்றோரையும் பார்த்துக் கொள்வான் ஸ்டீபன். காய்கறிகள் வாங்காவிட்டாலும் அவனிடம் சிறிது நேரம் பேசி விட்டு தான் நகர்வாள் ஆசிரியை அமலா. அன்று வெளியூரில் இருந்து குடும்பத்துடன் வந்த மகளுக்காக காய்கறிகள் வாங்கினாள். வீடு திரும்பிய போது கையில் ஒரு தங்க வளையலைக் காணாமல் பதறினாள். நல்ல காய்கறிகளை தேடிய போது நழுவியதோ என நினைத்தாள். ஆனால் அவன் பார்த்ததும் சொல்லியிருப்பானே என்றும் தோன்றியது.
வேறு யாரும் எடுத்தால்... என்னாகும் என வருந்தியபடி நடந்ததை கணவரிடம் தெரிவித்தாள். 'நன்றாகத் தேடிப் பார்' என்றார் அவர். மூன்று நாளாக அவள் ஸ்டீபனைத் திரும்பியும் பார்க்கவில்லை. வீட்டிற்கு தேடி வந்தான் அவன். ஆசிரியையின் கணவரிடம் 'ஒரு வாரமா டீச்சர் காய்கறி வாங்கலையே... என்மீது கோபமா' என நா தழுதழுக்க கேட்டான். 'அதெல்லாம் இல்லை ஸ்டீபன். உள்ளே வா... காபி சாப்பிடு' என்றார் அவர். அதற்கு அவன், 'கடையை பார்க்க ஆள் இல்லை'' என்று ஓடி விட்டான். அப்போது அழுக்குத் துணிகள் கிடக்கும் பெட்டியில் வளையல் இருந்ததைக் கண்ட மகள், , ''அம்மா... வளையல் கிடைச்சிருச்சு'' எனக் கத்தினாள். அப்பாவியான ஸ்டீபனைச் சந்தேகப்பட்டோமே; சரியாக தேடிப் பார் என அவரும் கூட சொன்னாரே... என அமலாவின் புத்திக்கு உறைத்தது.
ஒன்றை நினைக்கும் முன், செயல்படுத்தும் முன் நிதானியுங்கள் என்கிறது பைபிள்.