நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பியானோ இசைப்பதில் திறமை கொண்டிருந்தான் இளைஞன் ஒருவன். அவன் ஒருமுறை புகழ் பெற்ற பீத்தோவன் வீட்டிற்குச் சென்று, அவர் இசைத்த பியானோ கண்ணாடி பெட்டியில் இருப்பதைக் கண்டான். பொறுப்பாளரின் அனுமதியுடன் அதைப் பெற்று இசைத்து பார்த்து மகிழ்ந்தான். மேலும் அவன், ' இங்கு பல இசைக்கலைஞர்கள் வருகை தந்திருப்பார்களே... அவர்கள் எப்படி இசைத்தனர் என்பதைச் சொல்லுங்கள்' என்றான்.
அதற்கு அவரோ, 'பல இசைக்கலைஞர்கள் இங்கு வந்துள்ளனர். ஆனால் யாரும் இதை இசைக்க நினைத்ததில்லை. காரணம் அவர்கள் பீத்தோவனுக்கு இணையாக தங்களை நினைக்கவில்லை. அதனால் அதை தொடக்கூட முயற்சிக்கவில்லை'' என்றார் பொறுப்பாளர். ஒருவன் புகழுடன் திகழ வேண்டுமானால் முதலில் தன்னடக்கமுடன் செயல்பட வேண்டும் என்பதை உணர்ந்தான்.