ADDED : மார் 01, 2024 02:24 PM
திருமணம் ஒன்றுக்கு டாக்டர் ஆப்ரகாம் சென்றார். அங்கு வந்த வக்கீல் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது வந்த ஒருவர், ''டாக்டர்... அடிக்கடி தலைவலிக்குது. என்ன செய்யலாம்'' எனக் கேட்டார். '' உணவும், ஓய்வும் சரியாக இருந்தால் போதும். தேவைப்பட்டால் இந்த மாத்திரையைச் சாப்பிடுங்கள்'' எனக் கொடுத்தார்.
அப்போது வேறொருவர், ''எனக்கு அடிக்கடி படபடப்பு ஏற்படுகிறது. செக் - அப்புக்கு வரலாமா'' எனக் கேட்க, ''இன்று மாலை வாருங்கள். பார்க்கலாம்'' என்றார். அருகில் இருந்த வக்கீல், ''இப்படித்தான் என்னிடமும் பலர் பிரச்னைக்கு தீர்வு கேட்பார்கள். ஆலோசனை அளித்தால் கட்டணமாக மறுநாளே பில் அனுப்பி விடுவேன்'' என்றார் வக்கீல். ''ஓ... அப்படியா...'' என ஆச்சரியப்பட்டார் டாக்டர். கட்டணம் வசூலிக்கலாம் என ஐடியா கொடுத்ததற்கு சன்மானம் கேட்டு மறுநாளே வக்கீலிடம் இருந்து டாக்டருக்கு ஓலை வந்தது. 'வசூல்ராஜாவாக என்னை மாற்றிடுவார் போலிருக்கே' என்று சிரித்தார் டாக்டர் ஆப்ரகாம்.