ADDED : மார் 08, 2024 02:01 PM
ஜான்வெஸ்லி என்ற போதகருக்கு ஆண்டு வருமானம் 2 லட்சம். அதில் 25,000 ரூபாயை தர்மம் செய்வார். மீதி அவரது தேவைக்கு போதுமானதாக இருந்தது. அவரது விடாமுயற்சியால் பல்கலை பேராசிரியர் ஆனார். அவரது வருமானம் முன்பை விட இரண்டு மடங்கு அதிகரித்தது. இதனால் ஆடம்பரமாகச் செலவழித்தார்.
ஒருநாள் அவரது அறையை சுத்தம் செய்யும் வேலைக்காரச் சிறுமி வந்தாள். குளிரை தாங்க முடியாமல் தவித்தாள். அவளிடம் ஸ்வெட்டர் கூட இல்லை. அவளின் உடல் நடுக்கம் கண்ட ஜான்வெஸ்லி வருத்தப்பட்டார். ஆடம்பரமாக பணத்தை செலவழித்தோமே! இவளுக்கு ஸ்வெட்டர் வாங்கி கொடுத்திருக்கலாமே? இவளைப் போலவே பலரும் கஷ்டப்படுகிறார்களே... அவர்களுக்கு உதவாமல் போனோமே... ஆண்டவர் என்னைப் பற்றி என்ன நினைப்பார்'' என வருந்தி மனம் திருந்தினார். அதன்பின் சிக்கனமாக செலவழித்து ஏழைகளுக்கு உதவினார்.
நல்ல வழியில் செலவழிப்பவனே பாக்கியவான்.