ADDED : மார் 08, 2024 01:57 PM

ஆடுகள் மேய்த்துக் கொண்டிருந்தான் ஒரு இளைஞன். அவ்வழியாக வந்த குதிரை வீரன் ஒருவன் அருகிலுள்ள கிராமத்திற்கு எப்படி செல்வது என அவனிடம் கேட்டான். இதில் சென்றால் கிராமம் வரும் என்றான். வழிகாட்ட என்னுடன் வர முடியுமா எனக் கேட்க, 'நான் இல்லாவிட்டால் ஆடுகள் வழி தவறி விடும்' என்றான். பலமுறை வலியுறுத்தியும் இளைஞன் சம்மதிக்கவில்லை.
அதற்குள் படை வீரர்கள் சிலர் அங்கு வந்தனர். 'இளவரசே... உங்களைக் காணாததால் இங்கு தேடி வந்தோம்' என்று சொல்லி அழைத்துச் சென்றனர்.
மறுநாள் அரண்மனையில் இளவரசன் முன்பு ஆடு மேய்க்கும் இளைஞன் நிறுத்தப்பட்டான். சரியான வழிகாட்டுதலும், கடமை உணர்வும் கொண்ட நீ இங்கு பணியாற்றுகிறாயா எனக் கேட்டார் இளவரசர். இவ்வளவு நாளும் வேலை கொடுத்த எஜமானரிடம் சொல்லி விட்டு வருகிறேன் என்றான் இளைஞன். அவனது நேர்மை, உண்மை தன்மையையும் உணர்ந்த இளவரசர் தன் மெய்க்காப்பாளராக நியமித்தார். உண்மையாக இருந்தால் முன்னேறுவது உறுதி.