
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பசியுடன் இருந்த இரண்டு எலிகள் சமையலறைக்குள் நுழைந்தன. அங்கு ஒரு பாத்திரத்தில் பால் இருப்பதை உணர்ந்தன. ஆனால் குதித்தும் தாவியும் பாலை எட்ட முடியவில்லை.
கடைசியில் ஒன்றின் மீது மற்றொன்று ஏறினால் பாலைக் குடிக்க முடியும் என முடிவு செய்தன. அதன்படி முதல் எலி பசியாறத் தொடங்கியது. ஆனால் கீழே இருந்த எலி பசியால் பொறுமை இழந்தது.
'உன்னைப் போல நானும் பசியாற வேண்டாமா...' எனக் கத்தியது. மேல் இருந்த எலி அதைக் கேட்டு அவரசப்பட்டு கீழே குதிப்பதற்கு பதிலாக பாத்திரத்திற்குள் குதித்தது. பிறகு என்ன... கீழே நின்ற எலி பாத்திரத்தை சுற்றி சுற்றி வந்து பசியால் மயங்கியது. 'நிதானத்தை இழந்து அவரசப்படாதீர்கள்' என்கிறது தேவமொழி.