நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இடது கையை இழந்த இளைஞன் ஒருவனுக்கு, தற்காப்பு கலையில் வீரனாக மாற வேண்டும் எனஆசை. அதற்காக பயிற்சி கூடத்தில் சேர்ந்தான். மூன்று மாதமாக ஒரே பயிற்சியை சொல்லிக் கொடுத்தார் குருநாதர். அவனும் ஆர்வமுடன் கற்றான். ஒருமுறை குருநாதரைச் சந்தித்த வீரர் ஒருவர் வம்புக்காக போட்டிக்கு அழைத்தார். தன் சார்பாக ஒற்றைக் கை இளைஞனைத் தேர்வு செய்த குருநாதர், 'களத்தில் இறங்கு' எனக் கட்டளையிட, இளைஞனும் போட்டியில் வெற்றி பெற்றான்.
''குருவே! என் மீது நம்பிக்கை கொண்டது எப்படி'' எனக் கேட்டான். அதற்கு அவர், ''நான் அளித்த பயிற்சியின்படி தாக்குதலின் போது எதிராளி உன் இடது கையைத் தான் பிடிக்க வருவான். அப்போது எதிரியை பலமாக தாக்கும் விதத்தில் தான் பயிற்சியளித்தேன். நீயும் பதிலடி கொடுத்ததால் வெற்றி உன் வசமானது'' என்றார் குரு.பலவீனம் பலமாகும்.