ADDED : மார் 15, 2024 11:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளி மாணவன் ஜானிடம், 'ஆசிரியர் சொன்னதை செய்தாயா...' என அவனது தாயார் கேட்டாள். அதற்கான காரணம் தெரியாமல் யோசித்தான் ஜான். இதை புரிந்து கொண்ட அவனது தந்தை, 'அலெக்சாண்டர் பற்றி நீ கேள்விப்பட்டிருப்பாய். உலகிலுள்ள நாடுகளை எல்லாம் தன் வசப்படுத்திய அவர் படைவீரர்களிடம், 'என் தந்தை பிலிப்சை விட என் குருநாதரான அரிஸ்டாட்டிலுக்கு அதிகம் கடமைப்பட்டிருக்கிறேன்' என அடிக்கடி குறிப்பிடுவார். தேசப்பற்று கொண்ட வீரனாக ராணுவத்தில் பணியாற்ற நீயும் விரும்புகிறாய் அல்லவா... அதற்காகவே ஆசிரியர் சொன்னதை செய்தாயா என கேட்கிறாள் உன் தாய்'' என்றார்.