
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடல் வழியாக சென்று அமெரிக்கா உட்பட பல நாடுகளை கண்டுபிடித்தார் கொலம்பஸ். இதற்காக பாராட்டு விழா நடந்த போது பொறாமைக்காரர் ஒருவர், ''நீங்கள் மட்டுமல்ல... யார் அட்லாண்டிக் கடலில் பயணம் செய்தாலும் நாடுகளை கண்டுபிடித்திருப்பர்'' என்றார்.
அவரிடம், ' உங்களுக்கு ஒரு சவால். கோழி முட்டையை செங்குத்தாக நிற்க வைக்க முடியுமா'' எனக் கேட்டார். பலமுறை முயற்சித்தார். முடியவில்லை. 'என்னால் தான் முடியவில்லை. உங்களால் முடியுமா'' எனக் கேட்டார் அந்த நபர். முட்டையின் அடிப்பகுதியை மேஜை மீது லேசாக தட்டி விட்டு செங்குத்தாக நிற்க வைத்தார் கொலம்பஸ். அதை பார்த்ததும் இகழ்ச்சியுடன், ''இம்.. இது தானா...நானும் செய்வேன்'' என்றார் அவர். கொலம்பஸ் பதில் சொல்லாமல் புன்னகைத்தபடி வெளியேறினார்.