நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிராமத்தைச் சேர்ந்த எட்வின் ராஜாவின் ஒரே மகள் ரோஜா. உள்ளூரில் உள்ள பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பை முடித்த அவள் நகரத்திலுள்ள காலேஜில் சேர்ந்தாள். முதல் மூன்று நாட்கள் பெற்றோர் சொன்ன அறிவுரைகளை அமைதியாக கேட்டாள். ரோஜா மீதுள்ள பாசத்தால் நான்காம் நாளும் தனியாக அறிவுரையைத் தொடர்ந்தாள் அம்மா. வீட்டுக்கு வந்திருந்த ரோஜாவின் அத்தை லல்லி இதைக் கவனித்தவளாக, 'பூப்போல இருக்கும் நம்ம ரோஜாவுக்கு அறிவுரை சொல்ல மறக்காதீங்க அண்ணி. அப்போதுதான் அவள் படிப்பில் மட்டும் அக்கறை கொள்வாள்' என்றாள். அதற்கு பதிலாக, ' நீங்கள் சொல்லும் அறிவுரை ஒவ்வொன்றும் முள் போல இந்த ரோஜாவை எப்போதும் பாதுகாக்கும்' என்றாள் ரோஜா.