நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இரு சகோதரர்கள் இறந்த தந்தையின் உடலை நல்லடக்கம் செய்ய தயாராயினர். அங்கு வந்த தந்தையின் நண்பர் கனல், ''உங்கள் தந்தை என்னிடம் 1 லட்சம் வாங்கியுள்ளார் 'பணத்தை கொடுத்தால் பிணத்தை எடுக்கலாம்' என கறாராக பேசினார். 'எங்களுக்கு தெரியாது. நாங்கள் எதுக்கு கொடுக்கணும்''என சகோதரர்கள் மறுத்துப் பேசினர். வீட்டிற்குள் இருந்து ஓடி வந்த மகள் தன் நகைகளை கழற்றி கொடுத்து ''ஐயா... நல்லடக்கம் செய்ய உதவுங்கள்'' எனக் கெஞ்சினாள்.
அவள் தலை மீது கை வைத்த கனல், '' உங்கப்பா என்னிடம் பணம் வாங்கலை. நான் தான் அவரிடம் வாங்கினேன். உண்மையின் பாதையில் நடப்பவருக்கு இந்த பணத்தைக் கொடுங்கள் என்றார். அந்தப் பணம் உனக்குத் தானம்மா'' என மகளிடம் கொடுத்தார் கனல்.