ADDED : மே 31, 2024 10:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அறிஞர் ஒருவரிடம் ' நீங்கள் ஞானம் அடைந்தது எப்படி' எனக் கேட்டான் ஒருவன். ''ஒருநாள் குளக்கரை படியில் அமர்ந்திருந்தேன். அப்போது தண்ணீர் குடிக்க வந்த நாய் ஒன்று முன்னே செல்லாமல் வேகமாக பின்வாங்கியது. மீண்டும் மீண்டும் அவ்வாறே செய்தது. கடைசியாக துணிவுடன் தண்ணீரில் வாய் வைத்துக் குடித்தது. அப்போது தான் தண்ணீரில் தெரிவது தன்னுடைய நிழல்தான் என்பதை நாய் உணர்ந்தது. 'நான்' என்னும் பிம்பத்தை மனதில் இருந்து வெளியேற்றிய போது என்னுள்ளே ஆண்டவர் குடியேறினார்'' என்றார்.