
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'டேய்... லாரன்ஸ்' என அழைத்தபடி அவனது மாமா வீட்டிற்குள் நுழைந்தார். 'நீ விரும்பிய போலீஸ் வேலைக்கு ஆர்டர் வந்திருக்கு' என்றார்.
அப்போது வாசலுக்கு வந்த தபால்காரர் மீண்டும் ஒரு தபாலைக் கொடுத்தார். அதை படித்ததும் ' நீ யோகக்காரன்டா... தீயணைப்பு துறையில் இருந்தும் உனக்கு ஆர்டர் வந்திருக்கு' என்றார் மாமா மகிழ்ச்சியோடு. கைநிறைய சம்பாதிக்க போலீஸ் வேலையில் சேர்ந்திரு என தன் எண்ணத்தையும் சொன்னார். அதற்கு அவன், 'சின்ன வயதில் இருந்து நான் ஆசைப்பட்டது போலீஸ் வேலைதான். நல்ல நிலைக்கு நான் வரணுமுன்னு பட்டாசு ஆலையில் வேலை பார்த்த அம்மா, அங்கு ஏற்பட்ட தீ விபத்தில் இறந்தாங்க. அவங்க ஆத்மாவை சந்தோஷப்படுத்த தீயணைப்பு துறையில் சேருவது தான் சரி' என்றான் லாரன்ஸ்.