நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'' எனக்கு பசியாக இருக்கு. எது கிடைத்தாலும் நாம் சமமாக பங்கிட்டுக் கொள்வோம் என சிங்கம் ஒன்று தன் அருகில் இருந்த ஓநாய், நரியிடம் சொன்னது. அவைகளும் சம்மதம் தெரிவித்தன. அப்போது அங்கு வந்த ஆடு ஒன்றை, ஒநாய் கொன்று மூன்றாக பங்கிட்டது.
முதலில் இந்த யோசனையை சொன்ன சிங்கம் திடீர் என பின்வாங்கி, ஒநாயை கொன்றது. இதை பார்த்த நரி, உயிருக்கு பயந்து கொஞ்சம் மட்டும் எடுத்துக் கொண்டு மீதியை தாராளமாக சிங்கத்திற்கு கொடுத்தது. இப்படி பங்கு வைப்பதற்கு எங்கு கற்றாய் எனச் சிங்கம் கேட்க, இறந்து கிடந்த ஓநாயை காட்டியது நரி.
நீதி, நியாயத்தை வலியவர்கள் பார்க்க மாட்டார்கள்.